Einstein’s Theory of Relativity - காலமும் இடமும் வேறு அல்ல, இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை, நமக்கு இன்னும் புலப்படாத ஒரு பெரிய கட்டமைப்பின் ஒரு பகுதி.
SPACE+TIME=SPACETIME
இன்னும் தெளிவா புரிய ஒரு SCI-FI ROMANCE
2105 AD 10:00 AM
சிங்கார சென்னை
நம்ம மணி காலைல எந்திரிச்சு பள்ளு கூட விளக்காம, வீட்ல இருந்து கெளம்பி தெரு முனைல இருக்கற CAFÉ (டீ கடைக்கு) போயி ஒரு LONG BLACK (அதாங்க டீ) சொல்லிட்டு நிகோட்டின் இன்ஹேளர் எடுத்து ஆன் பண்றான் (புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு).
இதையே கொஞ்சம் GRAPH போட்டா
கதைக்கு திரும்ப வருவோம்
10:30 AM
அப்ப அந்த வழியா லேடஸ்ட் மாடல் ULTIS65K பைக்ல மணியோட தோஸ்த் ராஜு வரான், இன்னொரு முனைல இருந்து STREAK ஹோவர்ல ஆர்த்தி மிதந்துட்டு வர (கரெக்ட் பேக்ரவுண்ட்ல ஹீரோயின் என்ட்ரி தீம் சாங்க்), காத்துல அவ துப்பட்டா பறக்குது. ரெண்டு பேரும் அவ துப்பட்டாவ பாக்கறாங்க.
இங்க கதைல ஒரு ட்விஸ்ட் வைக்றோம்
நின்னுட்டு இருக்க நம்ம மணியோட கண்ணுக்கு துப்பட்டா வேகமா பறக்கர மாதிரி தெரியுது. ஆனா பைக்ல வர்ர ராஜுவுக்கு அதே துப்பட்டா மெல்ல பறக்கர மாதிரி தெரியுது. ரெண்டு பேர் பாக்கறதுமே உண்மைதான்.
இதுக்கு காரணம் ஒரு பொருள் இன்னொரு பொருளோடு RELATIVE MOTIONல இருக்கும்போது SPACE மற்றும் TIME வேறுபடும். இத இருநூறு வருசத்துக்கு முன்னாடி EINSTEIN கண்டுபிடிச்சு சொன்னது இந்த கூமுட்டைகளுக்கு தெரியாது.
ஆர்த்திய பாத்த உடனே பைக்ல பத்தாவது கியர்ல இருந்து அஞ்சாவது கியர் போட்டு வர்ர் வார்ர்னு வண்டிய உறும விட்டு திருப்ப.
சத்தம் கேட்டு திரும்பி பார்த்த ஆர்த்தி “அய்யய்யோ சனியன் சீன் போட்டுட்டு வருதே”, என்று கடுப்போடு அக்சிலேட்டரை முறுக்கி ஒளி வேகத்திற்கு செல்கிறாள்.
ராஜு உடன் பைக் மோடிலிருந்து ஹோவர் மோடிற்கு மாறி ஒளி வேகத்திற்கு பறக்கிறான். வண்டியின் ஹீலியம் பேட்டரி சிகப்பு லைட் உடன் கதற தொடங்கியது.
“கொஞ்சம் நேரம் தாக்குபிடி பஞ்சகல்யாணி”, என்று வண்டியை தட்டி கொடுத்து முன்னேறுகிறான்.
ஆர்த்தி “சே வேற வழியே இல்ல” வண்டியை கூவத்தின் மீது ஹோவர் செய்து PHOTON BOOSTERஐ ஆன் செய்கிறாள். STREAK ஒன்றரை ஒளி வேகத்திற்க்கு பறக்கிறது.
10:35 AM
நம்ம மணி டீ சாப்பிட்டு கொண்டு நடக்கிற காமெடிய பார்க்கிறான்.
ராஜுவின் ஹீலியம் பேட்டரி கடைசி முனகலோடு தனது இயக்கத்தை நிறுத்துகின்றது, வண்டி வேகம் குறைந்து தெளிந்த கூவ நீரில் மூள்க தொடங்குகிறது.
ஆர்த்தி “சாவுடி மகனே, புதுசா ரெண்டு முதலை இப்பதான் உட்டாங்க” என்றபடி தனது வாட்ச்சை பார்க்கிறாள்.
10:32 AM
“சே, மொதல்ல RELATIVITY PROOF வாட்ச் வாங்கணும், மறுபிடியும் ஸ்லோ ஆயிடுச்சு”
கரெக்ட் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க ஒளியின் வேகத்தை கடந்ததால் ஆர்த்தி மூன்று நிமிடம் பின்னோக்கி TIME TRAVEL செய்துவிட்டாள். இது எப்படி சாத்தியம்!!?
SPACETIME என்பது ஒரு வலை போன்ற அமைப்பில் இணைந்து இருக்கும், ஆர்த்தி ஒளியின் வேகத்தை கடந்த போது, அவள் வலையின் ஒரு பகுதியை ரப்பர் போல இழுத்து விட்டாள். அதாவது வேகமாக செல்வது போல் இருந்தாலும் அவாள் அதே இடத்தில் அதே நேரத்தில் தான் இருந்தாள்.
அதாவது ஆர்த்தி ராஜூவை விட அரை ஒளி வேகமாக சென்றாள், ராஜு ஒரு ஒளி வேகத்தில் சென்றான் ஆனால் மணியை பொறுத்த வரை இவர்கள் இருவருமே ஒளியின் வேகத்தை விட வேகமாக செல்லவில்லை.
தொடரும்.....