Monday, June 13, 2011

TIME TRAVEL சாத்தியமா - PART I (THEORY OF EVERYTHING)


THEORY OF EVERYTHING (TOE), இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே இயங்குவது ஒரே சித்தாந்தத்தின் அடிபடையில் என்பது இதன் சாராம்சம். கடந்த ஒரு நூற்றாண்டாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் மண்டையை பிய்த்து கொண்டிருப்பது இதற்காகத்தான், சுருக்கமா சொன்னால் இது HOLY GRAIL OF SCIENTISTS எனலாம். EINSTEIN தனது GENERAL RELATIVITY கண்டுபிடிப்புக்கு பிறகு எடுத்து கொண்ட ஆராய்ச்சி இது தான், தனது மரண படுக்கையில் கூட இதற்கான ஃபார்முலாக்களை அசைபோட்டு கொண்டிருந்தார் என்பது அவரது குழுவின் கூற்று. இது நம்மை சுற்றி உள்ள கடவுளின்(!!!) படைப்பின் மர்மங்களை வெளிக்கொணரும் என்றும் மனிதனின் எதிர்காலத்தில் ஒரு புதிய பரிணாம பாதையை உருவாக்கும் என்று கேள்வி.
 

இது பற்றி எங்காவது சுஜாதா புஸ்தகத்தில் படிக்கும்போதோ அல்லது, பேப்பரில், யாராவது இதை பற்றி கண்டுபிடித்து தொலைத்செய்தியை படிக்கும் போதோ, இதை பற்றி நாம் கேள்வி பட்டுள்ளோம் என்று காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.
 
சரி பில்ட் அப் போதும் மேட்டருக்கு வருவோம்.

இதன் ஒரு வரி விளக்கம் இயற்பியலின் அனைத்து கோட்பாடுகளையும் ஒரே சித்தாந்தத்தின் கீழ் இணைப்பது. ரொம்ப யோசித்து நமக்கு இல்லாத மூளையை கசக்க வேண்டாம், அதாவது இது வரைக்கும் PHYSICS கண்டுபிடிச்ச எல்லா ஃபார்முலாவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கானு பாக்றது.  விவேக் ஒரு படத்துல புள்ளி வெச்ச கோலத்த கரெக்ட் பண்ண COSMIC ENERGY COUPLED WITH ATOMIC ENERGY MINGLED WITH BIOTECHNOLOGY அப்படினு பிட்ட போடுவாரே அத காமெடினு நினைச்சு சிரிச்ச கேனபயல்கள்ள நானும் ஒருத்தன், இப்ப இந்த மேட்டர் பத்தி வலையில் தேடுனப்ப அவரோட தொலைநோக்கு பார்வை புரிஞ்சுது.
 

இதை கண்டுபுடிச்சா WORMHOLE மற்றும் TIMEWARP ரெண்டுக்கும் விடை கிடைச்ச மாதிரி (அதாவது TIMETRAVEL கூட பண்ணலாம்). என்னடா இது ரொம்ப நல்ல இருக்கே இது நடக்குமா, இதுவரைக்கும் எவ்ளோ கண்டுபிடிச்சு இருக்காங்க அப்படின்னு கொஞ்சம் தேடி பார்த்தா GENERAL RELATIVITY மற்றும் QUANTUM MECHANICS இது ரெண்டுக்கும் என்ன சம்மந்தம்னு தெரியாம பிச்சிட்டு இருக்காங்க (கொஞ்சம் தெளிவா சொல்னும்னா புவி ஈர்ப்பு விசைக்கும் அணுக்களுக்கும் என்ன சம்மந்தம்). அது கூட எதுவுமே உறுதி/நிரந்தரம் கிடையாது அப்படின்னு ஒரு தியரி இதையும் சேத்துக்கோங்க (இது குவார்ட்டர் உட்டுகிட்டு நம்ம பழனி சாமியார் சொன்னது இல்ல சத்தியமா ஒரு விஞ்ஞானி சொன்னதுதான்). தெளிவா சொல்லனும்னா இது வரைக்கும் உருப்படியா எதுவுமே கண்டுபிடிக்கல. இத இவனுக கண்டுபிடிப்பானுகளா மாட்டாங்களா அப்படின்னு ஒரு பிரகஸ்பதி ஆராய்ச்சி பண்ணி இன்னும் இருபது வருசத்துல 50-50% சான்ஸ் இருக்குனு யாருக்கும் புரியாத கணக்கு வழக்கு போட்டு காட்டி இருக்காரு, அதாவது எது நடந்தாலும் அண்ணனுக்கு பேரு. இத பத்தி பல முட்டாப் பயலுகளும், ஏதோ ஒன்னு ரெண்டு புத்திசாலிகளும் நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்காங்க, தயவு செய்து எதையும் படிச்சிறாதிங்க எல்லாம் டுபாக்கூர்.

6 comments:

  1. அய்யா என் கெணத்த காணும் .. கொஞ்சம் டைம் ட்ராவல் பண்ணி கனா போன என் கேணத்தை கண்டுபுடிச்சி தாங்க

    ReplyDelete
  2. நண்பா உங்கள் தளத்தில் கமெண்ட் போட ரொம்ப லேட் ஆகுது ..

    இத போடவே எனக்கு 3 நாள் ஆய்டுச்சினா பாத்துகோங்க ..


    கொஞ்சம் என்னனா னு பாருங்க

    ReplyDelete
  3. கண்டிப்பா என்ன பிரச்னை பாக்ரேன், ரொம்ப நன்றி ஆனந்த்

    ReplyDelete
  4. மச்சி டைம் ட்ராவல்லாம் சான்சே இல்ல பா ...இப்போ எங்க பாஸ் டேய் ஆனந்த் போய் நேத்து ஸ்டேடஸ் பைல்ல எடுத்து வாடா னா நான் ஸ்டோர் ரூமுக்குபோய் அத எடுத்து வருவேன் ..

    எங்க மம்மி, டேய் போன வாரம் வச்ச மீன் குழம்பை எடுத்துவர சொன்னா நான் போய் பிரிஜ்ல இருந்து எடுத்து வருவேன் .. இப்போ மேட்டர் என்னனா பழச நாம எடுக்கணும்னா அதுக்கு ஒரு ஸ்டோரேஜ் வேணும் .. ஓகே வா .. கோடி வருடங்களுக்கான ஸ்டோரேஜ் க்கு நாம எங்க போறது

    ReplyDelete
  5. CRYSTAL BASED STORAGE வைரதுல தகவல் சேமிப்ப பத்தி படிச்சேன் கிட்டதட்ட சொல்றத பாத்தா unlimited storage மாதிரி தெரியுது எந்த அளவு சதியாம்னு தெரியல

    Time travel பண்ண முடிஞ்சா ஸ்டோரேஜ் தேவையே இல்லை, எது வேணுன்னாலும் பின்னாடி போயி எடுத்துகலாம்.

    உங்க கெனத்த பத்தி இன்னும் யோசிச்சிட்டு இருக்கேன், அதான் அடுத்த போஸ்ட் போட லேட் ஆயிடுச்சு.

    ReplyDelete