இந்த பகுதி டைம் டிராவல் செய்ய முடிந்தால் அதனால் என்ன முரண்பாடுகள் எழலாம் என்பது பற்றிய ஒரு பார்வை.
- நான் டைம் மெஷினில் ஏறி எண்பது வருடம் பின்னாள் போய் என் தாத்தாவை தேடி கண்டுபிடித்து கொலை செய்தால் என்னவாகும். (அவர நான் பார்தது கூட கிடையாது எங்க அப்பா பிறந்ததுக்கு காரணம்கிற ஒன்ன தவிர எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது !!!)
- இருபது வருடம் பின்னாள் போய் இளைய உங்களை பார்த்து நீச்சல் தெரிந்திருப்பதின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி கற்றுக்கொள்ள சொல்கிறீர்கள். அதை கேட்டு உங்களின் இளவயது பிரதி நீச்சல் கற்றுக்கொள்கிறான். அவனுக்கு பத்து வருடம் கழித்து டைம் மெஷின் கிடைத்தாலும் டைம் டிராவல் பண்ணி போய் நீச்சல் பற்றி சொல்லணும் என்கிற அவசியம் இல்லை ஏனெனில் உங்களுக்கு தான் நீச்சல் முன்பே தெரியுமே. (அப்படி நீங்க சொல்லாட்டி உங்ககிட்ட பத்து வருஷம் முன்னாடி நீச்சல் கத்துக்க சொன்னது யாரு!!! அப்படி யாருமே சொல்லாட்டி நீங்க ஏன் நீச்சல் கத்துகிட்டீங்க!!! உங்களுக்கு நீச்சல் தெரியுமா தெரியாதா ?!!! )
- நீங்கள் பத்து வருடம் பின்னாள் போய் உங்களிடம் நீங்களே ஆயிரம் ருபாய் கொடுத்து நீச்சல் பழகிக்கொள் என பணித்து திரும்பி நிகல் காலத்திற்க்கு வந்து கிணற்றில் குதிக்கறிர்கள். (ஆனா அந்த விளங்காத பய -அட உங்கள தான் ஆயிரம் ருபாய வாங்கிட்டு நேரா சரக்கு அடிக்க போயிட்டா??? வேற என்ன சங்கு தான் ஊஉ......... !!!!!!!!!)
- நமது அன்பு தோழர் ஆனந்த் முதல் பகுதியில் கிணற்றை காணவில்லை டைம் டிராவல் செய்து கண்டுபிடித்து தருமாறு பின்னூட்டு செய்து இருந்தார். ஒரு உதாரணத்திற்கு அவர் கிணற்றை தேடி டைம் டிராவல் செய்து கடந்த காலத்திற்கு போய் சரியாக கிணறு இருந்த இடத்திலேயே இறங்கினால் என்ன ஆகும் (முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
- இருப்பதிலேயே குழப்பமான முரண்பாடு இதுதான் கூர்ந்து கவனிக்கவும். நீங்கள் ஐந்து நிமிடம் எதிர்காலத்திற்கு பயணம் செய்து உங்களின் எதிர்கால உருவத்தின் மூக்கின் மேல் ஓங்கி குத்துகிறீர்கள். உடன் உங்களின் எதிர்கால பிம்பம் நிகல்கால உங்களை பதிலுக்கு குத்துகின்றது. இந்த செயல்கள் நடப்பதற்க்கு ஐந்து நிமிடம் ஆகின்றது, முதல் வரியின் படி கடந்தகாலத்தில் இருந்து நீங்கள் டைம் டிராவல் செய்து வந்து நிகல்கால உங்களை குத்துகிறீர்கள், உடன் கடந்த கால நீங்கள் நிகல்காலத்தை பதிலுக்கு குத்துகிறீர்கள். வலியில் கண்ணை மூடி திறந்து பார்த்தால் எதிரில் குத்துவதற்க்கு தயாராக நீங்கள் நின்று கொண்டு உள்ளிர்கள், மறுபிடியும் ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. இதன் முடிவு தான் என்ன (குத்து வாங்கி வாங்கி உடம்பில் உள்ள தக்காளி சட்னி எல்லாம் சிந்தி , முந்தய பத்திக்கு முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
- டைம் டிராவல் செய்வதில் முக்கியமான அம்சம் ஒளியின் வேகத்தில் செல்வது. ஒளி வேகத்தில் செல்வது மனித மூளை மற்றும் கண்களால் உணர முடியாத அளவு. ஏதேனும் ஒரு திட பொருள் நாம் செல்லும் பாதையில் இருந்தால் ( ஆத்தா ஒளி வேகத்துல போறேன் யாரும் குறுக்க வராம நீதான் பாத்துக்கணும் அப்படின்னு வேண்டிட்டு புறப்பட வேண்டியது தான், மீறி யாராவது குறுக்க வந்தா வேற என்ன முந்தய பத்திக்கு முந்தய பத்திக்கு முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
- எண்களை குளறுபடியாக உள்ளீடு செய்து டைம் மெஷின் தவறாக உயிரின் மூலம் ஜனித்த காலத்திற்க்கு முன் சென்று விட்டால் என்னவாகும் (முந்தய பத்திக்கு முந்தய பத்திக்கு முந்தய பத்திக்கு முந்தய பத்தியில் கடைசி வரியை படிக்கவும்).
- எதிர்காலம் என்பது நாம் தீர்மானிப்பது, இன்னும் நிகலாத ஒன்று. அறிவியலின் படி விதி என்று ஒன்று இல்லாவிடில் இன்னும் நடக்கவே இல்லாத ஒரு செயலுக்கு எப்படி செல்வது.
இந்த முரண்பாடுகளுக்கு பதில் CHAOS மற்றும் ANTHROPIC கோட்பாடுகளை கலந்து யோசித்து பார்த்தால் நீங்கள் கடந்த காலத்திற்க்கு சென்று உங்கள் தாத்தாவை கொல்வது ஏற்கனவே முடிவான ஒன்று. ஆனால் உங்களுக்கு தெரியாத விஷயம் உமது பெற்றோர் உம்மை பொள்ளாச்சி சந்தையில் தவிடிற்க்கு வாங்கியது, உங்களுடைய தாத்தா உண்மையில் உங்கள் தாத்தவே இல்லை.
இன்னொரு பதில் நீங்கள் உங்கள் தாத்தாவை கொல்லும் பொழுது ஒரு PARALLEL UNIVERSE உருவாகிவிடும். ஒரு பரிமாணத்தில் நீங்கள் இருப்பீர்கள் இன்னொன்றில் நீங்கள் பிறக்கவே போவது இல்லை. ஏனெனில் அந்த பரிமாணத்தில் உள்ள உங்கள் தாத்தாவை கொன்றுவிட்டீர்கள்.
இன்னும் பல பதில்கள் இருந்தாலும் சரியான ஒன்றை காலம் தான் சொல்லும். அதுவரை டைம் டிராவல் செய்ய முடிந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்பனை குதிரையை தட்டி விடலாம்.
- முற்றும் -
எப்பா .. நெனச்சி பாக்கவே கொடூரமா இருக்கு மச்சி .. இந்த கதை வேணாம் ..
ReplyDeleteடைம் மிசின்லாம் வேணாம்னு அவங்க கிட்ட சொல்லு மச்சி '''
தலைவர் சொன்ன மாதிரி [யாரு தலைவரா .. அதான் பா நம்ம நித்தி ] சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும் பா ..
நமது அன்பு தோழர் ஆனந்த் முதல் பகுதியில் கிணற்றை காணவில்லை டைம் டிராவல் செய்து கண்டுபிடித்து தருமாறு பின்னூட்டு செய்து இருந்தார். ஒரு உதாரணத்திற்கு அவர் கிணற்றை தேடி டைம் டிராவல் செய்து கடந்த காலத்திற்கு போய் சரியாக கிணறு இருந்த இடத்திலேயே இறங்கினால் என்ன ஆகும் (முந்தய /////
ReplyDeleteஒ ..இதான் சைக்கிள் கேப்ல சைடுல குத்தரதா
பொரு ஆனந்த் இத்தொட டைம் டிராவல் முடிஞ்சுச்சு கொஞ்ச நாளைக்கு அறிவியல் பத்தி எழுதி அறுவை போட மாட்டேன். அவசர அவசரமா முடிசுட்டேன் பின்னாடி ஒரு பெரிய கதை இருக்கு அடுத்த பதிவுல அந்த கதைய எழுதறேன்
ReplyDelete