இது
ஆங்கில வார்த்தைகளுக்கு கேலியாக அர்த்தம் சொல்வது. இது நகைச்சுவைக்காக மட்டுமே யாருடைய
மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது இல்லை.
CACHE | கணினி வல்லுநர்கள் பதுக்கி வைக்க பயன்படுத்தும் இடம் |
CACTUS | வரதட்சணை கொடுமையை ஒழித்த அற்புத நிவாரணி |
CADAVER | மனம் திருந்திய மனிதன் |
CAFE | கடலை போடும் இடம் |
CANCER | வேள்விக்கு கிடைக்கும் வரம் |
CANDIDATE | வேலை இல்லாதவர்களை வேலையில் இருப்பவர்கள் இப்படி அழைத்து கேவலப்படுத்துவர் |
CANNABIS | கற்பனை திறன் ஊக்கி |
CANNIBAL | அடுத்தவர் உழைப்பில் வாழ்வது |
CAPACITY | எவ்வளவு மது அருந்தினால், மின்கம்பங்களுடன் உரையாடாமல் வீடு போய் சேரலாம் என்ற அளவு வரையறை |
CEMETERY | பிளாட் போடாமல் மிச்சம் வைத்த இடம் |
CIGARETTE | இன்றைய இளைஞர்களின் வேள்வித் தீ |
CIVILIZATION | பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், அடுத்தவர்களுக்கு பேன் பார்த்து அதை பிடித்து தின்னாமல் தூக்கி எறிந்தபோது இது தொடங்கியது |
COMFORT | அடுத்தவர்கள் கஷ்டப்படும் பொழுது வரும் உணர்ச்சி |
COMMERCE | சராசரி மக்களிடம் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அதிக விலைக்கு வேறு இடத்தில் விற்பது. இந்த கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அரசுக்கு ஒரு பங்காக, மதிப்பு கூட்டு வரி மற்றும் சேவை வரி என்று மக்களிடமே பெற்று கொடுக்கபடுகிறது. |
COMMON MAN | உள்ளாடைகளை பான்டின்(Pant) உள்ளே அணிபவர்கள். எதிர் பதம்: super man |
COMMONWEALTH | அடிமைகளாக இருந்ததை நினைவு படுத்தும் அமைப்பு |
COMMUNICATION | யாருக்கும் புரியாத மாதிரி பேசுவது (அல்லது) உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது |
COMPULSION | எதாவது தப்பு செய்து மனைவியிடம் மாட்டி கொண்டு பின்னர் வேறுவழியின்றி அவர் கேட்டதை வாங்கி கொடுப்பது |
CONGRATULATION | வயிற்று எரிச்சலை வெளிக்காட்டி கொள்ளாமல் பேசுவது |
CONSCIENCE | மாட்டி கொள்வோம் என்ற பயம் |
CONSOLATION | நம்மை விட திறமையானவர்கள் நம்மை விட கஷ்டப்படும் பொழுது கிடைக்கும் உணர்ச்சி |
CONSULT | பணம் கொடுத்து ஒருவரிடம் யோசனை கேட்பது |
CREATIVITY | பன்னிரண்டு வருடம் ஆசிரியர்கள் போராடி அழித்தது, மிச்சம் இருப்பதை அலுவலக மேலாளர் பார்த்து கொள்வார் |
CUPID | துஷ்ட தேவதை |
CYNIC | தெளிவான மனிதன் (அல்லது) தீர்க்கதரிசி |
இதன் முந்தைய பகுதிகள்
இதன்
சாரம் The
Devil’s Dictionary என்ற புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது. இது Ambrose
Bierce என்பவரால் 1881 இல் ஒரு வாராந்தரி பத்திரிக்கையில் தொடராக எழுதப்பட்டது.
புத்தகத்தை
பதிவிறக்கம் செய்ய.
Visit : http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-3.html
ReplyDelete