BABY | (நபருக்கு நபர் மாறுபடும்) சர்வ ஜாக்கிரதையாக கையாள வேண்டிய கொடிய மிருகம், நமது மனதை படித்து பின்னர் அதை நமக்கு எதிராக பயன்படுத்த வல்லது, சதா ஓலமிட்டு தூக்கத்தை கெடுக்கும் ஜந்து, யாராவது தூக்கும் வரை காத்திருந்து அவர்கள் மேல் சிறுநீர் கழிக்கும் துஷ்டன்/துஷ்டி, ஆதாரம், விபத்து. |
BACHELOR | வாடகைக்கு வீடு கிடைக்காத அப்பாவிகள். |
BANKRUPT | மனைவியின் வங்கி கணக்கில் சேமிப்பு/இருப்பு செய்யும் பெண்ணுரிமை போற்றும் புரட்சி சிந்தனை கொண்டவர். |
BAR | புதிய சிந்தனைகள் உருவாகும் உலை களம், வாள்கள் தீட்டப்படும் பட்டறை, சமுதாயத்தை வழி நடத்தும் சமச்சீர் கல்விசாலை |
BARTENDER | நேரம் ஆகிறது வீட்டுக்கு போங்க என்று அக்கறையோடு சொல்லும் நண்பர். |
BATH | நாம் செய்யாதது |
BATHROOM | நமக்கு தேவையில்லாதது |
BEAUTY PARLOUR | வாழ்க்கை முழுவதும் முயன்றும் மாற்ற முடியாத முகத்தை மூன்று மாத பயிற்சி முடித்தவரிடம் மாற்ற சொல்லி ஒப்படைக்கும் இடம் |
BELT | தொப்பையை பிதுக்கி மலச்சிக்கல் போக்கும் கட்டு, புனிதமான மாடுகளின் தோலில் தயாரிக்கப்படுவது, இதை மிக அழுத்தமாக அணிந்திருப்பவரின் பின்னால் நிற்பதை தவிர்க்கவும் மிக வேகமாக காற்றை பிரிக்கும் வல்லமை கொண்டவர்கள். |
BEER | இன்றய இளைஞர்களின் இளந்தொந்தி இரகசியம். |
BEGGAR | புரட்சிகரமான பொருளாதார கொள்கையால் பணமுறை சுதந்திரம் அடைந்தவர் |
BIGAMIST | திரும்ப திரும்ப அதே தப்பை செய்யும் முட்டாள் |
BLACKGUARD | கருப்பான செக்யூரிட்டி |
BORE/BLADE | இவ்வளவு கஷ்டப்பட்டு உசுர குடுத்து பதிவு போடுற நான்தான் ஸார் |
BRAIN | நமக்கு இல்லாதது |
BRIDE | ஆட்டை வெட்டுபவர் அல்லது புதிதாக அடிமை வாங்கியவர். |
BRIDEGROOM | பலிகடா அல்லது அடிமை சந்தையில் விற்கபடும் நபர். |
BROKER | நம்மிடம் பணம் பெற்று கொண்டு நம் வாழ்வை நாசமாக்கும் மோசதாரி, இப்பத்த ரேட் வரதட்சணையில் 10% , நீங்க வரதட்சணை வாங்கவில்லை என்றால் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாண பிராப்தம் இல்லை |
BUDGET | நாம் கடன் வாங்கியவர் முகவரி மற்றும் அவர்களிடம் மாட்டி கொள்ளாமல் பயணம் செய்ய வழிகாட்டும் வரைபடம். |
BUFFET | ஃபுல் மீல்ஸ் அல்லது அன்லிமிடெட் மீல்ஸ் |
BUSY | (நபருக்கு நபர் மாறுபடும்) முதலாளி வரும் பொழுது தொழிலாளி இந்த நிலையில் இருப்பார், சாக்கு, இளுத்தடிப்பது, தொடங்கிய வேலையை முடிக்க முடியாமல் முழிக்கும் கையாலாகாத்தனம். |
BUSINESS | மேற்கூறிய தொழிலாளியை வைத்து வேலை வாங்கி நாசமாய் போக விந்தையான ஒரு யுக்தி. |
Tuesday, August 9, 2011
Devil's English -Tamil Dictionary - Alphabet B
Subscribe to:
Post Comments (Atom)
அனுபவமாட...........
ReplyDeleteBORE/BLADE
ReplyDeleteஇவ்வளவு கஷ்டப்பட்டு உசுர குடுத்து பதிவு போடுற நான்தான் ஸார்...
இது ஒண்ணுதான் மச்சி கரெக்டா இருக்கு
எனக்கு சுய விளம்பரம் பொதுவா பிடிக்காது ஆனா இது ஒரு விதிவிலக்கு
ReplyDelete