கனவுகள் இல்லா பின்னிரவில்
எதுவும் நிகழவில்லை
எனக்குள் நான் பேசிய ஒலியில்
விழிக்கிறேன்
உளறல் போல இருந்தது
வருடமொன்று ஆகியும்
வலியினுள்ளே தொட்ட
விரலில் ஈரம்
தெரிந்த இடத்தில்
தொலைந்த நண்பன்
கால்புதையும் கடற்கரையில்
கரைந்த கனவுகள்
பாதி கண்களை மூடி யோசித்தேன்
விண்மீன் பக்க காற்றில்
சுவாசம் எப்படி ?
கேட்டிராத வான்மொழி கேள்விகளின்
நிழலில் ஒளிந்திருக்கலாமோ ?
சாய்ந்த மரமொன்றின் சருகுகள்
மீது நடந்தேன்
தள்ளி கேட்கும் காலடித்தடத்தின்
எதிரொலியாக இருக்குமோ ?
அருவமான அழகிகளின் முடிவில்லா
முத்தங்களிலா ?
தெரியாத இடைவெளி உந்தி
தள்ளி விட்டது
உள்ளுயிற்புடன் திரும்பி நடந்தேன்
கால்தட்டியது வாழ்க்கை
விதிர்த்து வீழ்ந்து கண்விழித்தேன்
காலநேரமின்றி கதையடிக்க பக்கத்தில்
இடம் போட்டு வைத்திருப்பான்
தள்ளி செல்லுங்கள் திரும்ப தூக்கத்தில்
தேடி பார்க்க வேண்டும்
உயிரினிசை ஒலிக்கும் வரை
தேடல் தொடரும் ...
- சிவா
எப்படிடா மாமா உன்னால இப்படீல்லாம் உன்னேல முடியுது...... இந்தியாவில் இருக்கும் வரைக்கும் இதெல்லாம் எங்க வச்சி இருந்த...
ReplyDeleteரொம்ப நல்ல இருக்குடா............
Touching...
ReplyDeleteஎன்னால நம்பவே முடியல ... மச்சி நீ சரக்கு அடிக்கவே மாட்டேன்னு சோன்ன... இப்போ இப்படி ஒளருற
ReplyDeleteநல்லாருக்கு மச்சி ....ஆனா இத யாரை மனசுல வச்சி எழுதுன
ReplyDeleteபாதியில அத்து உட்டுட்டு போன என் நண்பன் ஒருத்தன் பத்தி, அவன் எங்கள விட்டு போயி கிட்ட தட்ட ஒரு வருஷம் ஆகுது.
ReplyDeleteகவிதை சூப்பர் மச்சி ....ஆனா என்னை மாதிரி அரை மண்டைகேல்லாம் புரியறது ரொம்ப குஷ்டம் மச்சி
ReplyDeleteநண்பா ஆனந்த் நீ யாரு எப்பேற்பட்ட தில்லாலங்கடி எல்லாம் இந்த ஊருக்கு நல்லா தெரியும்
ReplyDeleteநம்ம நண்பன் அய்யப்பன் இருக்கானே அவன் பின்னூட்டு கூட பாருங்க பாரட்ரானா இல்ல நக்கல் பண்றானா யாரு நாலயும் கண்டு பிடிக்க முடியாது. நம்ம கூட வந்து சேருவது எல்லாமே விசமா தான் இருக்குது
ReplyDeleteSuperb da machi
ReplyDelete