Sunday, January 18, 2015

Devil's English -Tamil Dictionary - Alphabet C



இது ஆங்கில வார்த்தைகளுக்கு கேலியாக அர்த்தம் சொல்வது. இது நகைச்சுவைக்காக மட்டுமே யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது இல்லை.
 

CACHE கணினி வல்லுநர்கள் பதுக்கி வைக்க பயன்படுத்தும் இடம்
CACTUS வரதட்சணை கொடுமையை ஒழித்த அற்புத நிவாரணி
CADAVER மனம் திருந்திய மனிதன்
CAFE கடலை போடும் இடம்
CANCER வேள்விக்கு கிடைக்கும் வரம்
CANDIDATE வேலை இல்லாதவர்களை வேலையில் இருப்பவர்கள் இப்படி அழைத்து கேவலப்படுத்துவர்
CANNABIS கற்பனை திறன் ஊக்கி
CANNIBAL அடுத்தவர் உழைப்பில் வாழ்வது
CAPACITY எவ்வளவு மது அருந்தினால், மின்கம்பங்களுடன் உரையாடாமல் வீடு போய் சேரலாம் என்ற அளவு வரையறை
CEMETERY பிளாட் போடாமல் மிச்சம் வைத்த இடம்
CIGARETTE இன்றைய இளைஞர்களின் வேள்வித் தீ
CIVILIZATION பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், அடுத்தவர்களுக்கு பேன் பார்த்து அதை பிடித்து தின்னாமல் தூக்கி எறிந்தபோது இது தொடங்கியது
COMFORT அடுத்தவர்கள் கஷ்டப்படும் பொழுது வரும் உணர்ச்சி
COMMERCE சராசரி மக்களிடம் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அதிக விலைக்கு வேறு இடத்தில் விற்பது. இந்த கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அரசுக்கு ஒரு பங்காக, மதிப்பு கூட்டு வரி மற்றும் சேவை வரி என்று மக்களிடமே பெற்று கொடுக்கபடுகிறது.
COMMON MAN உள்ளாடைகளை பான்டின்(Pant) உள்ளே அணிபவர்கள். எதிர் பதம்: super man
COMMONWEALTH அடிமைகளாக இருந்ததை நினைவு படுத்தும் அமைப்பு
COMMUNICATION யாருக்கும் புரியாத மாதிரி பேசுவது (அல்லது) உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது
COMPULSION எதாவது தப்பு செய்து மனைவியிடம் மாட்டி கொண்டு பின்னர் வேறுவழியின்றி அவர் கேட்டதை வாங்கி கொடுப்பது
CONGRATULATION வயிற்று எரிச்சலை வெளிக்காட்டி கொள்ளாமல் பேசுவது
CONSCIENCE மாட்டி கொள்வோம் என்ற பயம்
CONSOLATION நம்மை விட திறமையானவர்கள் நம்மை விட கஷ்டப்படும் பொழுது கிடைக்கும் உணர்ச்சி
CONSULT பணம் கொடுத்து ஒருவரிடம் யோசனை கேட்பது
CREATIVITY பன்னிரண்டு வருடம் ஆசிரியர்கள் போராடி அழித்தது, மிச்சம் இருப்பதை அலுவலக மேலாளர் பார்த்து கொள்வார்
CUPID துஷ்ட தேவதை
CYNIC தெளிவான மனிதன் (அல்லது) தீர்க்கதரிசி



இதன் முந்தைய பகுதிகள்

இதன் சாரம் The Devil’s Dictionary  என்ற புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது. இது Ambrose Bierce என்பவரால் 1881 இல் ஒரு வாராந்தரி பத்திரிக்கையில் தொடராக எழுதப்பட்டது.

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய. 

Sunday, January 11, 2015

பேய்களின் சீசன் - பான்ஷீ (BANSHEE)

    
      இது பேய்களின் சீசன் என்பதால் என்னுடைய சமிபத்திய ஆராய்ச்சிகளும் பேயை பற்றியே இருந்தது. அதில் நான் பார்த்த பழங்கால செல்டிக் நாட்டுப்புற கதைகளில் வரும் பான்ஷீ பற்றி பார்க்கலாம். நீங்கள் முன்னரே “screaming like a banshee” என்ற சொற்றொடரை எங்காவது படித்திருப்பீர்கள். அப்படி படித்து அதன் அர்த்தத்தை ஆராய்ச்சி செய்த போது நான் அறிந்தவை.

        பான்ஷீ பெண் வடிவம் கொண்ட ஒரு துர்தேவதை, குடும்பத்தில் ஒரு மரணம் விழும் வேளை வரும் பொழுது இதன் கிரீச்சிடும் ஒப்பாரி ஓலம் கேட்கும் என்பது நம்பிக்கை.

     நடுநிசியில் ஒரு வயதான பெண் வடிவில் வந்து மரணம் நடக்கவிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில், இறக்கப் போகின்றவரின் ரத்தம் படிந்த துணிகளை ஒப்பாரியுடன் துவைத்து கொண்டு இருக்கும் என்பது ஸ்காட்லாந்து மக்களின் நம்பிக்கை. (ஆனால் நடுநிசி நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு அகோரமான கிழவி உங்கள் ரத்தம் படிந்த சட்டையை, அழுது கொண்டே, துவைத்து கொண்டு இருந்தால் உங்களுக்கு பீதியில் இதயம் நின்று விடாதா?)



        பான்ஷீயின் தோற்றம் பலவாறு கூறப்படுகிறது, இது பெரும்பாலும் கிழிந்த ஆடையுடன் ஒரு வயதான கிழவி வடிவில், கூர்மையான அழுகிய பற்கள் மற்றும் இரத்த நிறத்தில் அகோரமான கண்களுடன் இருக்கும். பான்ஷீ ஒரு சில சமயம் அழகிய இளம் பெண் அல்லது தலை இல்லாத முண்டமாக கையில் இரத்தகலசத்துடன் இருக்கும் என்பதும் நம்பிக்கை.


           இந்த பான்ஷீயை பற்றி பல கதைகள் உலவுகின்றன. இது மிகவும் கொடுமைக்கு உள்ளாகி கோரமாக இறந்த ஒரு பெண்ணின் ஆவி என்றும், அதன் வம்சா வழியில் வரும் மக்களுக்கு, ஆபத்து வருவதை முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கை செய்யும் என்று கேள்வி.

             இன்னொரு நம்பிக்கையில், சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் பெண்கள் அதற்கு கூலியாக மதுவை பெற்று வாழ்ந்தனர். அந்த பெண்கள் கிறித்துவ மத கோட்பாடுகளுக்கு இணங்காமல் வாழ்ந்ததால், சொர்க்கம் சேராமல் பூமியில் ஒப்பாரியுடன் உலவுவதாக சொல்வர்.

         ஆனால் இந்த ஆயிரம் வருட நம்பிக்கையின் உண்மை காரணம் “Barn owl” என்ற ஒருவித ஆந்தையின் அலறல் சத்தம். அது ஒரு வயதான பெண்ணின் கிரீச்சல் போன்று இருப்பதே இந்த நம்பிக்கையின் காரணமாக இருக்கலாம் என்று அண்மையில் கண்டுபிடித்து உள்ளனர்.