| ABSURD | நமது அபிப்ராயத்திற்க்கு மாறான எல்லா விஷயமும் |
| ABSINTHE | சோம்புப்பானம் |
| ABSRACT | பில்ட் அப் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா பினிஷிங்க் தான் |
| ACQUAINTANCE | கடன் கொடுக்கும் அளவு பழக்கம் இல்லாதவர்கள் ஆனால் கடன் வாங்கும் அளவு பழக்கமானவர்கள் |
| ADAMANT | அகம் பிடிச்ச கழுதை |
| ADHERENT | கொள்கை பரப்பு செயலாளர் |
| AFFINITY | அநேக திருமணங்களில் காணாமல் போகும் வஸ்து |
| AFFLICTION | டிக்கெட் வாங்குவது |
| AFTERTHOUGHT | வேலியில் சென்ற ஓணானை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு குடயுது என்பது |
| ALLIANCE | கூட்டு களவானித்தனம் |
| AMBIDEXTROUS | இரண்டு கைகளிலும் பிளேடு போட்டு பர்ஸ் அடிக்கும் தில்லாலங்கடி |
| AMNESTY | மக்கள் வரி பணத்தை மிச்சம் செய்ய அரசாங்கம் எடுக்கும் முயற்சி |
| ANGEL | காக்கை போல பறக்கும் ஒரு பறவை அல்லது சூப்பர் ஃபிகர் என இரண்டு பொருள் தரும் |
| ANTIPATHY | நாம் ரூட் போடும் ஃபிகரின் ஆண் நண்பன் மேல் வரும் ஒரு வகை உணர்ச்சி |
| APOSTATE | நமக்கு உதவி செய்யாதவர்கள் |
| APOTHECARY | சவக்கிடங்கிற்கு செல்லும் முன் பிணத்தை பக்குவம் செய்பவர் |
| ARCHITECT | ஸ்கெட்ச் போட்டு பணம் திருடும் மொள்ளமாரி |
| ARTIST | நீண்ட முடியுடன் பிள்ளை பிடிப்பவன் தோற்றத்துடன் இருப்பர் யாருக்கும் புரியாத வகையில் கிறுக்கி அதை அதிக விலைக்கு விற்பவர்கள். |
Wednesday, July 6, 2011
Devil's English -Tamil Dictionary - Alphabet A
Subscribe to:
Post Comments (Atom)

தல நீ பாட்டுக்கே பர்ஸ்ட் லெப்ட் எடுத்து ஸ்ட்ரெயிட்டா போயிட்டே இரு தல
ReplyDelete