Tuesday, May 24, 2011

அண்ட்ரோமிடா (Andromeda)

நமது பால்வெளி மண்டலத்திற்கு பக்கத்துக்கு விட்டில் உள்ள மற்றொரு விண்மீன் திரள். வானியல் அளவின் படி ஒளியின் வேகத்தில் நீங்கள் சென்றால் இருபத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளில் இதனை அடைந்துவிடலாம்.  1923 ஆம் ஆண்டு Edwin Hubble நமது நட்சத்திர மண்டலம் போக ஆன்றோமிடா போன்ற எனைய திரள்களும் உள்ளன என்று தெளிவுற நிருபித்தார். இது வானியலில் ஒரு மிகப் பெரிய மைல்கல் எனலாம், நமது விண்மீன் கூட்டு போல பல நூறாயிரம் கோடி குடும்பங்கள் உள்ளன என்றும் அதில் எங்காவது உயிர் ஜனிப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை குப்பனுக்கும் சுப்பனுக்கும் விதைத்தது. (இந்த பெயரை எங்கோ கேட்டு இருக்கிறோம் என்று யோசிபவர்கள் விண்வெளியில் இயங்கும் ஹப்பிள் தொலைநோக்கி - Hubble Space Telescope பற்றி  ஞாபகம் கொள்ளவும், இதன் சரித்திரத்தை பின்னொரு நாளில் அலசுவோம்). இதனை  M31 என்றும் அழைப்பர், இதன் அருகில் M32 மற்றும் M110 என்ற இரண்டு சிறிய திரள்களும் உள்ளன, இவை அண்ட்ரோமிடாவுடன் ஒப்பிடுகையில் குள்ளர்கள் (Dwarf elliptical galaxies) எனலாம். இந்த மூன்று திரள்களையும் நாம் சாதாரண தொலைநோக்கி மூலம் காணலாம்.(நட்சதிரங்களை பார்க்கும் செய்முறை பற்றியும் iphone இல் இதற்காக உள்ள மென்பொருள் பற்றியும் பிறிதொரு மழை இல்லா தெளிந்த இரவில் பார்க்கலாம். அதுவரை இந்த வலைபக்கத்தை உங்கள் விருப்ப பக்கங்களில் போட்டு வையுங்கள்).
Andromeda(M31) galaxy
மேலே உள்ள புகைப்படம் ஒரு கத்துகுட்டி பதிவாளரால் எடுக்கப்பட்டது என்பது ஒரு ஆச்சர்யமான செய்தி. இதில் சிறு வெள்ளை புள்ளிகளாக குள்ள விண்மீன் திரள்களை காணலாம். ஆன்றோமிடாவின் மைய பகுதி சிரற்று இரு பக்கங்களில் விடைத்து காணபடுகின்றது, முறையே P1 மற்றும் P2 புள்ளிகளில். இதன் மையத்தில் நானூறுக்கும் மேற்பட்ட நீல நட்சத்திரங்கள் உருவாகியுள்ளன, இவை மணிக்கு இருபத்திரண்டு லட்சம் மைல் வேகத்தில் சுற்றுகின்றன. இதன் காரணமாக மையத்தில் மிக சக்தி வாய்ந்த ஒன்று அல்லது மேற்பட்ட கருந்துளைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எல்லா விண்மீன் திரளின் மத்தியிலும் கருந்துளை இருப்பதே அவைகளின் ஈர்ப்பு விசைக்கு காரணம் என்பது பொதுவான நம்பிக்கை.
பால்வெளி மண்டலம்

நமது பால்வெளி மண்டலத்துடன்  ஒப்பிடுகையில் அண்ட்ரோமிடா பரப்பளவில் மிகவும் பெரியது ஆனால் நட்சத்திரங்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பது பால்வெளியில் தான். 

No comments:

Post a Comment