Monday, May 23, 2011

கிரேக்க நெருப்பு (GREEK FIRE)


சாண்டில்யனின் நாவல்களில் இதனைப் பற்றி படித்திருப்பிர்கள்.

Madrid Skylitzes கையெழுத்துப்பிரதி
பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் பய்சாந்தின்(Byzantine) கப்பற்படையில் உபயோகப்படுத்திய எரியூட்டுக் குண்டு (Incendiary Weapon). களினிகோஸ் (Kallinikos) என்ற எகிப்திய ஹிலியோபோலிஸ் (Heliopolis, Egypt) நகரை சேர்ந்த கட்டிடக்கலைஞரால் கான்ஸ்டான்டிநோபிள்(Constantinople) நகரில் கண்டுபிடிக்கபட்டது. கிரேக்க நெருப்பு பய்சாந்தின் ராஜ்ஜியத்தால் முகமதியர்களின்(Arab) படையெடுப்பை முறியடிக்க பயன்பட்டது. வரலாற்றாலர்களின் கூற்றுப்படி கிரேக்க நெருப்பை ஒற்றிய பயத்தால் எதிர் கப்பற்படைகள் பய்சாந்தினுடன் நேரடி மோதலில் ஈடுபடவில்லை, இதனால் இதன் பயன்பாடு மிகவும் குறைவாகவே தேவைப்பட்டது, கப்பல் மூழ்கிய பிறகும் நெருப்பு எரிந்ததால் இதனை பற்றிய ஒரு பீதி நிலவியது.
 
இதற்காக பயன்படுத்தப்பட்ட சூத்திரம் மற்றும் செய்முறை ராணுவ ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. இதன் செய்முறை பற்றிய சரியான விளக்கங்கள் எதுவும் இல்லை.

Leonarda Da Vinci-யின் குறிப்புக்களில் கிழ்வரும் செய்முறையை கண்டேன். இதனை மொழிபெயர்க்கும் பொழுது சாம்பிராணியின் ஆங்கில வார்த்தையை முதன் முதலாக படித்தேன்.

வில்லோ மரத்தின் கரித்துண்டுகள்,
வெடியுப்பு (Saltpetre, வெடிமருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண்படிக உப்பு.),
கந்தக அமிலம் (Sulphuric Acid)
கந்தகம் (Sulphur)
நிலக்கீல் (Pitch, சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள்)
சாம்பிராணி (Frankincense)
கற்பூரம் (Camphor)
ஆட்டுரோமம்

மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை கலந்து கொதிக்கவிட்டால் வரும் கலவை சுலபமாக பற்ற கூடியது, இதன் நெருப்பானது நீரின் அடியிலும் எரியும்.

பின்னர் அதனுடன் கிழ்வரும் பொருட்களை கலந்து காயவைக்கவும். அதனுடன் கூரான ஆணிகளை சேர்த்து பந்து போல உருட்டவும். அதன்மீது ஒரு சிறிய துளையிட்டு அதனுள் கந்தகம் மற்றும் மண்டித் தைலம்(Rosin) அடிக்கவும், இது பின்னர் திரி போல செயல்படும்.

மெருகெண்ணை (Varnish)
நிலக்கீலார்ந்த எண்ணை( Bituminous Oil)
கற்பூரத் தைலம் (Turpentine)
புளிக்காடி (Vinegar)


சிபோன்(Siphon) என்ற கருவி நெருப்பை எதிரி கப்பலின் மீது இறைக்க பயன்பட்டது. இதன் மாதிரி வடிவம் கிழ்வருமாறு.

கப்பலின் முன்பகுதியில் ஒரு உலையிட்டு அதன் மீது செம்பாலான ஒரு கொள்கலத்தில் கலவையை வைத்து அதன் அடியில் நெருபிடுவர். அது அழுத்தத்தில் பொங்கி வெண்கல குழாய் வழியாக எதிரில் உள்ள கப்பலில் பாயும்.

இதான் பயன்பாடு நபாள்ம்(Napalm) போன்றது. எந்த ஒரு வகை பெட்ரோலிய களிமமும் நபாள்ம் என்று அழைக்கப்படுகிறது, இது நவீன கால ராணுவத்தால் எரியூட்டு(Fire Thrower) ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

1 comment:

  1. உண்மையிலேயே ஆச்சிரியமான செய்தி தான் ...

    உங்களின் புதிய வலைதளத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete