Friday, May 27, 2011

கிரேக்க ராணுவ அணிவகுப்பு முறை (PHALANX)


750-350 கிமு

கிரேக்க நிலப்பரப்பு மலைபாங்காக இருந்த காரணத்தால் குதிரை படையின் உபயோகம் மிகவும் குறைவு, மேடு பள்ளமான குறுகிய நிலப்பரப்பில் காலாட்படையே வெற்றி தோழ்வியை தீர்மாணிக்கும். அதுமட்டுமின்றி கிரேக்க குதிரைகள் பெர்சிய ஜாதி குதிரைகள் போலன்றி மட்ட ரகம். இதன் விலை காரணமாக பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்க முடிந்தது.


கிரேக்க HOPLITE வீரர்கள் பூரண வெண்கல கவசமணிந்து இடது கையில் கனமான எழிலிருந்து ஒன்பது அடி நீள கனமான குத்தீட்டியும் வலது கையில் வட்ட வடிவிலான கேடயத்துடன் இருப்பர். கேடயம் மரத்தால் செய்திருந்தாலும் அதன் மீது வெண்கல தகரம் வெய்ந்திருக்கும். கேத்தின் உட்புறம் தோலால் கை முட்டியிலும் உள்ளங்கையிலும் பிணைத்து இருக்கும்.

 

 

கேடயம் கையில் பிணைத்து இருப்பதால் சுமப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் வேகமாக அசைக்க முடியாது. இடதுபுறம் கேடயத்தால் பாதுகாக்கபடும் வலதுபுறம் பாதுகாப்பின்றி இருக்கும், இதனால் முறையான அணிவகுப்பு இவர்களின் போர் முறையில் இன்றியமையாதது.




PHALANX அணிவகுப்பு முறையில் எட்டிலிருந்து பதினாறு வரிசை வரை வீரர்கள் அணிவகுத்து நிற்பர். வரிசையில் இருக்கும் வீரர்கள் அனைவரும் நெருக்கமாகவும் ஒரே சீரான வேகத்திலும் முன்னேறுவர். இவர்களின் வேகத்தையும் அணிவகுப்பையும் குழல்கள் ஊதி சீர்படுத்தபடும். எதிரிகளை சந்திக்கும் தருவாயில் முதல் ஐந்து வரிசை வீரர்கள் தங்கள் குத்தீட்டியை கேடயத்தின் இடைவெளியில் வழியாக எதிரிகளை நோக்கி நீட்டுவர். பின்வரிசை வீரர்கள் முன்னாள் உள்ள வீரர்களை பலமாக உந்தி தள்ளுவர். எட்டு வரிசை கொண்ட படை இருபது வரிசை கொண்ட படையை சந்திக்கும் பொழுது வெற்றி இருபது வரிசை கொண்ட படையின் உந்து சக்தி தீர்மாணிக்கும், அதே சமயம் பின்வரிசை வீரர்களின் கையில் உள்ள ஈட்டியின் நீலம் அதிகமாக இருப்பின் அது ஒரே நேரத்தில் பல வீரர்கள் போரிடும் வாய்ப்பை கொடுக்கும்.


Phalanx அணிவகுப்பில் ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தலைவர் மற்றும் பின்பகுதியில் ஒரு படைத்தலைவர்(ouragus) வரிசைகளை சீர்படுத்தி கொண்டு இருப்பர். இறுக்கமாக தங்கள் இடப்பக்கம் உள்ள வீரர்களை கேடயத்தால் பாதுகாத்து கொண்டே முன்னேறுவர், அப்பொழுது வலப்பக்க கடைசியில் உள்ள வீரர்கள் பாதுகாப்பு இன்றி இருப்பர். இதனால் முன்னேறும் பொழுது வலது பக்கமாக படை நகர்ந்து கொண்டே இருக்கும். எந்த படை முதலில் வரிசையை உடைக்கிறதோ அல்லது எதிரியின் வலது பக்கத்தை முதலில் அடைகிறதோ அதுவே வெற்றிபெறும். இந்த காரணத்தால் வலதுபுறம் உள்ள வீரர்கள் அதிக போர்த்திறன் வாய்ந்தவர்களாக இருப்பது மிகவும் முக்கியம்.

பணம் படைத்த யாரும் கவசம் மற்றும் இதர உபகரங்களை வாங்கினால் படையில் சேர்ந்து கொள்ளலாம். போரில் பெரும் வெற்றி மற்றும் பெயரால் பிற்காலத்தில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் படையில் சேர்ந்தனர். கிரேக்க தேசம் பல்வேறு தனி குறுநிலங்களாக பிரிந்து கிடந்தது, ஒன்றுடன் ஒன்று ஏதாவது ஒரு கரணத்திற்காக போரிட்டு கொண்டு இருந்தன. மக்களின் வாழ்வில் போர் ஒரு இயல்பான நிகல்வாகவே இருந்தது.



No comments:

Post a Comment